Posts

முதியோர் வாழ்க்கைமுறை - சில கருத்துக்கள்

  “‘ முதுமை என்பது ஆனந்தமாக ரசிக்க வேண்டிய பருவம். முதுமையை ரசிக்கத் தெரியாதவன் முட்டாள். நான் முதுமையை ரசித்துக்கொண்டிருக்கிறேன்.” என்று கேரள மாநிலத்தின் முன்னாள் முதுபெரும் அரசியல் பிரமுகர் சமீபத்தில் அளித்த பத்திரிகை பேட்டியில் கூறினார் . வாழ்க்கையில் ,பல தேவைகளில் பணமும் ஒன்று. ஆனால். பணமும் பொருளும் மட்டுமே வாழ்க்கை அல்ல . பல பருவங்களைக்கடந்து, தற்போது முதுமைப்பருவத்தில் இருக்கிறோம். நினைத்துப்பார்த்தால் ஒவ்வொரு பருவத்திலும் -வாலிபத்திலும் -நடுத்தர வயதிலும் வேலை செய்து அல்லது தொழில் செய்து சம்பாதித்திருந்தாலும் மனநிறைவோடு இருந்தோமா -என்றால் இல்லை. ஒவ்வொரு நிலையிலும் தேவைகள் அதிகரித்துக்கொண்டே இருக்க ,பிரச்னைகளும் போராட்டங்களுமாக வாழ்க்கை அமைந்தது. அமைதியாக கழிக்க வேண்டிய முதுமையிலும் பணம் -பொருளைத்தேடி ஓடிக் கொண்டே இருக்க வேண்டாம். முதுமையில் ஓய் வூதியம் - சேமிப்புக்கு கிடைக்கும் வட்டி - சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வாடகை வருமானம் ஏதாவது ஒரு வகையில் கிடைக்கும். வறுமை கோட்டுக்கு கீழே இருந்தால் அரசாங்கம் தரும் முதியோர் ஓய்வூதியம் கிடைக்கும். இதன் மூலம் யாரையும் சார்ந்தி...

நினைவுகளிலிருந்து – 3 பட்ரோடு பலராமன்

                   அக்டோபர் 1961 முதல் ஆகஸ்ட் 1964 வரை , சென்னையில் , தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் சர்வேயராக பணியிலிருந்தேன்.எனக்கு அசோக் நகர் பகுதியில்வேலை . அப்போதுதான்அசோக்நகர்    . உருவாகிக்கொண்டிருந்தது . அசோக் பில்லர் நிறுவப்பட்டு , சாலைகள் , குடிநீர் , வடிகால்வசதிகள் அமைக்கும் வேலைகள் நடந்து கொண்டிருந்தன .   வீட்டுமனைகள் , வர்த்தக      நிறுவனங்களுக்கான மனைகள் ஏற்படுத்தப் பட்டன. HIG , MIG , LIG என்ற அளவில் தனித்தனி வீடுகளுக்கான மனைகள் உருவாகின.அப்போது அடுக்குமாடி ( APARTMENT ) கலாசாரம் இல்லை.அசோக் நகருக்கு பிறகு,அருகிலும்விரிவு படுத்தப்பட்டு கே.கே.நகர் உருவானது. .           சர்வேயர் பணிக்குஉதவியாக , எனக்கு பலராமன் என்கிற    ( Chainman ]  உதவியாளர்        இருந்தார் . பரங்கிமலை பகுதியில் , பட் ரோடில் அவர் வீடு.பணியில் மிகவும் உதவியாக இருந்தார் . வேலையில் எந்த குறையும் சொல்ல முடியாது. ஆனால் அவனுக்கு அடிக்க...