Posts

Showing posts from June, 2021

நினைவுகளிலிருந்து – 3 பட்ரோடு பலராமன்

                   அக்டோபர் 1961 முதல் ஆகஸ்ட் 1964 வரை , சென்னையில் , தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் சர்வேயராக பணியிலிருந்தேன்.எனக்கு அசோக் நகர் பகுதியில்வேலை . அப்போதுதான்அசோக்நகர்    . உருவாகிக்கொண்டிருந்தது . அசோக் பில்லர் நிறுவப்பட்டு , சாலைகள் , குடிநீர் , வடிகால்வசதிகள் அமைக்கும் வேலைகள் நடந்து கொண்டிருந்தன .   வீட்டுமனைகள் , வர்த்தக      நிறுவனங்களுக்கான மனைகள் ஏற்படுத்தப் பட்டன. HIG , MIG , LIG என்ற அளவில் தனித்தனி வீடுகளுக்கான மனைகள் உருவாகின.அப்போது அடுக்குமாடி ( APARTMENT ) கலாசாரம் இல்லை.அசோக் நகருக்கு பிறகு,அருகிலும்விரிவு படுத்தப்பட்டு கே.கே.நகர் உருவானது. .           சர்வேயர் பணிக்குஉதவியாக , எனக்கு பலராமன் என்கிற    ( Chainman ]  உதவியாளர்        இருந்தார் . பரங்கிமலை பகுதியில் , பட் ரோடில் அவர் வீடு.பணியில் மிகவும் உதவியாக இருந்தார் . வேலையில் எந்த குறையும் சொல்ல முடியாது. ஆனால் அவனுக்கு அடிக்க...